விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார்.

இதனிடையே பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று மாலை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. பிரம்மாண்டமாக தொடக்க விழாவுடன் அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட உள்ளனர். அதன் சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் முதல் போட்டியாளராக ஜிபி முத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.அவரைத் தொடர்ந்து யாரெல்லாம் போட்டியாளர்களாக உள்ளே நுழைந்து உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

போட்டியாளர்கள் என்ட்ரி:
- ஜிபி முத்து
- அஸீம் (சீரியல் நடிகர்)
- அசல் கோலார்
- ஷிவின் கணேசன்.
- ராபர்ட் மாஸ்டர்.
- ஷெரின் (மாடல்)
- ராம் ராமசாமி
- ஏடிகே (பாடகர் – இலங்கை)
- ஜனனி
- அமுதவானன் (விஜய் டிவி காமெடியன்
- VJ மகேஷ்வரி
- VJ கதிரவன்
- ஆயிஷா (சத்யா சீரியல் நடிகை)
- தனலட்சுமி (பொதுமக்கள் ஆடிஷனில் தேர்வானவர்)
- ரச்சிதா மஹாலட்சுமி (சரவணன் மீனாட்சி நடிகை)
- மணிகண்டன் ராஜேஷ் (ஐஷ்வர்யா ராஜேஷ் அண்ணன்)
- சாந்தி அரவிந்த் (சீரியல் நடிகை)
- விக்ரமன் (விஜே)
- Queency
- நிவாஷினி (ஆடிஷனில் தேர்வானவர்)