பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி…. குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய ஜிபி.முத்து…. வீடியோவை பார்த்து நெகிழ்ந்த ரசிகர்கள்….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் அந்த சீசனில் மக்களின் நம்பிக்கையான போட்டியாளராக கொண்டாடப்பட்டவர் ஜி பி முத்து.டிக் டாக் மூலம் பிரபலமான இவர் அப்படியே ஒரு யூடியூப் பக்கமும் திறந்து அதிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

அதன் மூலமாக பிரபலமான இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர் உள்ளே நுழைந்தவுடன் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். இவர் இறுதி வரை வருவார் என எதிர்பார்த்த நிலையில் 14 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார்.அதன் பிறகு எனக்கு பணம் புகழ் எதுவும் தேவையில்லை தான் முக்கியம் என கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.

வீட்டிற்கு சென்றவுடன் மருத்துவமனையில் இருக்கும் தனது மகனின் புகைப்படத்தை அவர் வெளியிட்ட பிறகு அனைவருடன் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் வீடியோவையும் வெளியிட்டார்.இந்நிலையில் வீட்டிற்கு சென்றுள்ள ஜிபி முத்து தீபாவளிக்கு தனது மனைவிக்கு புடவை மற்றும் குழந்தைகளுக்கு நிறைய பட்டாசுகள் வாங்கிக் கொடுத்து கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.