தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அருள்நிதி. தமிழ் சினிமாவில் மிகவும் தரமான படங்களாக கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இவர் முதன்முதலில் பாண்டியராஜன் இயக்கிய வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

பல வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை தரமான படங்களை மட்டுமே மக்களுக்கு கொடுப்பேன் என கூறி நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான மௌனகுரு, டிமான்டி காலனி மற்றும் ஆறாவது சினம் உள்ளிட்ட பல படங்களும் கதையோடு அருள்நிதி நடிப்பையும் சேர்த்து பேசும் படங்களாக உள்ளன. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான டைரி என்ற திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பேரனான இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு கீர்த்தனா என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.தற்போது அவர்களின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
