பளீரிடும் அழகை பளிச்சென காட்டும் லாஸ்லியா – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை பெண் இவர். இலங்கை டிவி சேனல்களில் பணிபுரிந்த இவர், விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, தமிழக மக்கள் மத்தியிலும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கவின், லாஸ்லியா மீது அன்பு காட்டினார்.அதனால் இந்த நிகழ்ச்சியில் லாஸ்லியா – கவின் ஜோடி, அதிகளவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இதே நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற இயக்குநர், நடிகர் சேரனை, தன் தந்தை போலவே இருப்பதாக கூறியதால், தந்தை – மகள் போன்ற பாச காட்சிகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறியது.ஆனால், ஒரு கட்டத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த போட்டியாளர்களின் குடும்பங்களில், ,லாஸ்லியா குடும்பத்தினர், கவின் உடன் காதல் கொண்டதை கண்டித்தனர். உன்னுடைய இந்த செயலால், நம்முடைய குடும்பத்துக்கே தலைகுனிவு ஏற்பட்டு விட்டதாக அவரது பெற்றோர், லாஸ்லியாவை திட்டியதால் அவர் மனமுடைந்த அழுத காட்சிகள் எல்லாம் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த நிகழ்ச்சியை, எங்கேயோ கொண்டு சென்றது. ஆனால், இந்த சீசனின் லாஸ்லியா, ஒரு கட்டத்துக்கு பிறகு வெளியேற்றப்பட்டார். இறுதி வரை வரவில்லை.எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதை தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை தேடி வருகிறார், சில படங்களிலும் நடித்தார். சில படங்களில், சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றார். ஆனால் பெரிய அளவில் அவர் பேசப்படவில்லை. ஆனால், சினிமா வாய்ப்புகளை தேடிக்கொண்டு அவர் சென்னையிலேயே முகாமிட்டு விடுகிறார்.இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கும் லாஸ்லியா அடிக்கடி தனது லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். அதுவும், உடலின் கவர்ச்சி பாகங்கள் அப்பட்டமாக தெரியும் வகையில், அவர் பதிவிடும் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளுகிறது. லாஸ்லியா புகைப்படங்கள் அப்டேட் செய்த சில மணி நேரங்களில், இணையத்தில் செம வைரலாகி வருகின்றன.