வாரிசு பட சூட்டிங்…. விஜய் டிவி பிரபலத்திற்கு நடந்த அசிங்கம்…. சர்ச்சையை கிளப்பிய இயக்குனரின் பேச்சு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். இவரின் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஹிட் கொடுக்கும். தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கம் இப்படத்தை தில் ராஜு இயக்க விஜய் உடன் ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் சூட்டிங் பார்ட்டி நடந்த சம்பவம் குறித்து விஜய் டிவி சீரியல் நடிகர் ரவிச்சந்திரன் பதிவு செய்துள்ளார். பாண்டியன் ஸ்டோர் சொல்லிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து வருபவர்தான் நடிகர் ரவிச்சந்திரன். மசாலா பிசினஸ் தோல்வியை தழுவிய நிலையில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரைக்கு நடிக்க வந்த இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

அதனால் சூட்டிங் சென்று இருந்த போது இயக்குனர் இவரை மேலே கீழே பார்த்துவிட்டு கேரவனில் உட்கார வைத்துள்ளார். அதன் பிறகு உதவி இயக்குனர் வந்து உங்களை சார் கிளம்ப சொல்லிவிட்டார் என்றும் உங்களது லுக் ரிச் ஆக தெரிகிறது என்றும் கூறியுள்ளார். அப்படி அவங்களாக கூப்பிட்டு சம்பளம் முதற்கொண்டு எல்லாத்தையும் பேசி விட்டு பின்னர் இப்படி சொன்னதும் தொழிலில் தோல்வியுற்றதை விட பல மடங்கு அதிகமாக வலித்தது.

அதன் பிறகு நேரடியாக இயக்குனரிடம் சென்று இதை நான் விஜய் சாரிடம் கொண்டு செல்கிறேன் என சொன்னவுடன் கையெடுத்து கும்பிட்டு இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் உங்களுக்கு இன்றைக்கான சம்பளம் வந்துவிடும் என்று கெஞ்சி கேட்டதால் வேறு வழி இல்லாமல் சரி என கிளம்பி வந்தேன். இதனை விஜய் சாரிடம் கொண்டு போயிருக்க வேண்டும் என நடிகர் ரவிச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.