விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டுள்ளன.இதில் பெரும்பாலும் நாம் பார்த்த முகங்களை அதிக அளவு கலந்து கொண்டுள்ளனர்.வழக்கம் போல இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் பல டாஸ்க் கொடுத்து வருகிறது.

அதே சமயம் இந்த முறை கேப்டன் தேர்வும் நடைபெறவில்லை.வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் நான்கு அணிகளாக பிரிந்து வேலை பார்த்து வருகிறார்கள். இதனால் போட்டியாளர்களுக்கிடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வண்ணம் உள்ளது. தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடன இயக்குனரான ராபர்ட், வனிதாவின் முன்னாள் கணவர்.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்று இருந்த நிலையில் தற்போது மனிதாவின் முன்னாள் கணவர் ராபர்ட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்றுள்ளார். அதே சமயம் இந்த நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் நன்றாக விளையாடி வருகின்றார்.இப்படியான ஒரு நிலையில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் ரட்சிதா இருவரும் பிக் பாஸ் வீட்டில் எதிர் எதிரே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ரக்ஷிதாவிடம், எனக்கு பெண் நண்பர்கள் கிடையாது, உங்களை முதலில் சீரியலில் பார்த்தபோது எனக்கு மிகவும் பிடிக்கும்.இங்கிருந்து வெளியே சென்ற பிறகும் உங்களுடன் நட்பில் இருக்க நினைக்கிறேன் என ராபர்ட் மாஸ்டர் கூறியிருந்தார். இந்நிலையில் ராபர்ட் உடன் இதற்கு முன்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படும் வனிதா தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், ப்ராபர்ட் என்ன என் புருஷனா இல்ல பாய் பிரெண்டா, நான் பப்ளிசிட்டிக்காக அவனை யூஸ் பண்ணேன். இவன் 2007 ஆம் ஆண்டு யாரையோ கல்யாணம் பண்ணானாம். அது யாருன்னு எனக்கு தெரியல. இவனுக்கு பல கல்யாணம் நடந்திருக்கு. அவனோட மனைவி மற்றும் குழந்தை எங்கே என தெரியவில்லை.தற்போது வெளியில் தன்னை சிங்கில் என கூறிக்கொண்டு இமேஜ் உருவாக்கிக் கொண்டிருக்கிறான் என வனிதா கூறியுள்ளார்.