விஜய் டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் புதிய புதிய தலைப்பில் ஒளிபரப்பாகி வருகிறது. பல வருடங்களாக வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. அதற்கு மிகப்பெரிய காரணம் என்னவென்றால் நீயா நானா நிகழ்ச்சியின் ஆங்கர் கோட் கோபிநாத் என்று சொல்லலாம். மொத்த நிகழ்ச்சியையும் தனது கட்டுக்குள் வைத்து பிரமிக்க வைக்கும் வகையில் நடத்துவார்.

நிகழ்ச்சியில் விவாதங்கள் அனைத்தையும் முடித்த பிறகு தனக்கு உரிய பாணியில் பைனல் டச் கொடுப்பார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் இவருக்கு நீயா நானா கோபிநாத் என பெயர் வந்தது. பல வருடங்களாக வெற்றிகரமாக விஜய் டிவியில் இந்த ஷோ ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

இவர் முதன் முதலில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் அதன் பிறகு சிகரம் தொட்ட மனிதர்கள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன் பிறகு கையில் எடுத்த நிகழ்ச்சி தான் நீயா நானா. தற்போதும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தொகுப்பாளர் கோபிநாத்தின் தாய் தந்தையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. கோபிநாத்தின் தந்தை கடந்த 2020 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் தற்போது அழகிய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது .
