அவரு மட்டும்தான் நல்லா நடிச்சிருக்காரு – சந்திரமுகி 2 படத்துக்கு வந்துள்ள முதல் விமர்சனம்

பி.வாசு இயக்கிய சந்திரமுகி 2 படம் இன்று, ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படம் என்பதால், நிச்சயம் படம் வேற லெவலில் இருக்கும் என பலமான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதுவும், பி வாசு இயக்கம் என்பதால், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையிலும், விறுவிறுப்பாகவும் படத்தை உருவாக்கி இருப்பார் என்ற நம்பிக்கையும் இருந்தது.ஏனெனில், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் பி.வாசு இயக்கிய படம்தான் சந்திரமுகி. மணிச்சித்ரதாழ் என மலையாள படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம், ரஜினிக்காக சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டது. பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்திருந்த இந்த படம், மெகா ஹிட் படமாக அமைந்தது. அதுவும், சந்திரமுகி கேரக்டரில் ஜோதிகாவின் மிரட்டலான நடிப்பில், ரசிகர்கள் மிரண்டு போய்விட்டனர் என்றே கூறலாம்.சந்திரமுகி 2 படமும், அதுபோன்ற விறுவிறுப்பான காட்சிகளுடன், படம் செமையாக இருக்கும் என இன்று காலை முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் பலரும் ஏமாற்றமே அடைந்துள்ளனர். முதல் பாதி வரை டீசண்டாக செல்லும் படம் 2ம் பாகத்தில் திருப்தி அளிக்கவில்லை, குறிப்பாக இசை, பிளாஸ்பேக் போன்றவை எதிர்பார்த்த மாதிரி இல்லை. முருகேசன் கேரக்டரில் வடிவேலு நடிப்பும் ஏமாற்றம்தான். ஆனால், படத்தின் ஹீரோ ராகவா லாரன்ஸ் நன்றாக நடித்திருக்கிறார் என, முதல் விமர்சனமாக கூறி வருகின்றனர்.