இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக முன்னணியில் இருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதன்முதலாக இந்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி உட்பட பழமொழிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பு செய்து வரும் நிலையில் அண்மையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியது. தமிழைப் போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது.

இந்நிலையில் பிக் பாஸ் 16வது சீசன் தற்போது ஹிந்தியில் தொடங்கியுள்ளது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் அந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் பல போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ள நிலையில் தற்போது சஜித்கான் என்ற போட்டியாளர் ஒருவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஷெர்லின் சோப்ரா பரபரப்பு புகாரை மும்பைத்துள்ளார்.

அதாவது சஜித் கானை வீட்டில் ஒரு ஸ்டோரி நரேஷன் காக சந்தித்தபோது, அவரது பிரைவேட் பாட்டை காட்டி அதற்கு 10க்கு என்ன மார்க் கொடுப்பாய் என தன்னிடம் கேட்டதாக நடிகை கூறியுள்ளார் .மேலும் நான் அதற்கான பதிலை பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று சொல்ல விரும்புகிறேன் என ஷெர்லின் சோப்ரா தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
