விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர்தான் பூவையார். கிராமத்தில் கானா பாடல் பாடி கொண்டிருந்த பூவையார் என்கின்ற நபிஸ், சங்கீதம் முறைப்படி கற்ற மாணவர்களுடன் போட்டியிட்டு பைனல் வரை சென்றவர்.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான திகில் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதில் விஜயுடன் பாடி நடனமாடி இருப்பார். அதனைத் தொடர்ந்து ஆதி தனது பாடல் ஆல்பம் அல்லது திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு பூவையாருக்கு கொடுப்பதாக கூறினார். இவர் தற்போது பல்வேறு திரைப்படங்களுக்கு பாட்டு பாடி வருகிறார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இந்நிலையில் பூவையார் தற்போது சொந்தமாக கார் வாங்கியுள்ளார்.தனது புதிய காருடன் உள்ள பூவையாரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் 14 வயதில் சொந்தமாக கார் வாங்கிய பூவையாருக்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அவர் போட்டுள்ள பதிவு ஒன்றும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.