தமிழ் சினிமாவை பொருத்தவரை காமெடி என்றாலே வடிவேலு, விவேக் மற்றும் சந்தானம் உள்ளிட்ட நடிகர்கள் தான் நினைவுக்கு வரும். அதுவே பெண் காமெடி நடிகைகள் என்று கூறினால் அனைவரும் வருவது கோவை சரளாதான். இவர்களைத் தொடங்கி பெண் காமெடி நடிகையாக களமிறங்கியவர் தான் மதுமிதா. ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நகைச்சுவை தொடரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் தொடர்ச்சியாக சன் டிவியில் பெரிய பாப்பா மற்றும் சின்ன பாப்பா என்ற தொடரில் நடித்து தனது அற்புதமான காமெடிகளை அதில் வெளிப்படுத்தி இருப்பார். இதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு பல்வேறு பிரச்சனைகளிலும் சிக்கிக் கொண்ட இவர் தற்கொலை செய்து கொள்ளக்கூட முயற்சி செய்தார். அதனால் பாதியிலேயே அந்நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறினார்.

பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து நடித்து வந்த இவர் சமீப காலமாக இதுவரை எதிலும் காண முடியவில்லை. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மோசஸ் ஜோயயஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறினார். இவருக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

தனது மகனின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாமல் இருந்த மதுமிதா முதன் முறையாக தன் மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதுவும் நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி வர்ணத்தில் தனது குழந்தைக்கு ஆடை அணிவித்து அழகான புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
