பிரபல சீரியல் நடிகை யான மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த மாதம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர் மத்தியிலும் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதன் பிறகு அதிகாரபூர்வமாக ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் திருமணம் குறித்து அறிவித்த நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் இவர்களின் திருமணம் குறித்த விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கிறது இருந்தாலும் இதற்கெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொருவரின் விமர்சனத்திற்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார் ரவீந்தர்.அதனைப் போலவே தவறாக விமர்சிக்கும் பலருக்கும் மகாலட்சுமி பொறுமையாக தங்களின் திருமணம் குறித்த பதில்களையும் அவர் கூறி வருகிறார்.

இதனிடையே பல youtube சேனல்களுக்கும் இவர்கள் ஒன்றாக பேட்டி அளித்து வருகின்றன. அது மட்டும் அல்லாமல் இவர்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் மற்றும் அவுட்டிங் செல்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் மகாலட்சுமி ஆடி காரின் முன்பு நின்று எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஒருவேளை மகாலட்சுமிக்கு ரவீந்தர் வாங்கி கொடுத்த ஆடி கார் இதுதானா என கமாண்ட் செய்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இருந்தாலும் அண்மையில் ரவீந்தர் youtube சேனல் ஒன்று இருக்கு அளித்த பேட்டியில் இதுவரை மகாலட்சுமிக்கு தான் எதுவும் வாங்கித் தரவில்லை எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.