சின்ன திரையில் வளம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா படத்திலும் நடித்தார். இவர் கடைசியாக கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியான யானை படத்தில் ஜெபமலர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம் மற்றும் 10 தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார். அவ்வகையில் தனது ஆசை காதலனுடன் வெளிநாட்டில் இரண்டு மாதங்களாக ஊர் சுற்றிய புகைப்படங்களை பிரியா பவானி சங்கர் வெளியீட்டு வந்த நிலையில் தற்போது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோட்டில் நடிப்பதற்காக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட நாள் ரகசியம் ஒன்றை பிரியா பவானி தற்போது பகிர்ந்து உள்ளார். அதாவது அவர் ஜிம்முக்குச் சென்று உடல் எடையை குறைக்கும் பழக்கம் தினமும் இருப்பதால் ஜிம்முக்கு சென்று வருவார். அப்படி அவர் ஜிம்முக்கு செல்லும்போது அங்கிருந்த ஒரு பையன் மட்டும் இரண்டு வருடங்களாக தன்னை கண்டு கொள்ளாமல் தன் வேலையை மட்டுமே பார்த்து சென்று விடுவாராம்.

அதுமட்டுமல்லாமல் அந்த நபரை சைட் அடித்தபடி இருந்தது கூட அந்தப் பையன் எதுவும் பேசாமல் சென்று விட்டார். ஒரு நடிகை என்று கூட தெரிந்தும் மரியாதை கொடுத்த அந்த நபர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என பிரியா பவானி வெளிப்படையாக கூறியுள்ளார்.மேலும் இப்படிப்பட்ட நபர் தான் எனக்கு பிடிக்கும் என்று பிஎம்டபிள்யூ கார் வைத்திருக்கும் பையன்களை விட சொந்த உழைப்பில் பைக் வாங்கிய வைத்திருக்கும் பையன்களை தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என பிரியா பவானி வெளிப்படையாக கூறியுள்ளார்.