நயன் – விக்கி திருமணத்தில் இப்படி ஒரு பிரச்சனையா?…. அதுதான் இப்போ நடக்குற எல்லாத்துக்கும் காரணம்…. உண்மையை உடைத்த ஜோதிடர்….!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். மகாபலிபுரத்தில் இவர்களின் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற நயன் மற்றும் விக்கி தம்பதியினர் தங்கள் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்தனர்.

இந்நிலையில் அண்மையில் தங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்து இருந்தார்.திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் இப்படி கூறுகிறார்கள் என முதலில் அதிர்ச்சி அடைந்த பின்பு ரசிகர்கள் பின்னர் தெளிவாகினர்.அதாவது கடந்த நவம்பர் மாதமே இருவரும் வாடகத்தை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்து அதற்கான வேலைகளை செய்துள்ளதாக தகவல் வெளியானது. இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தனிக்குழு அமைத்து விசாரணை செய்ய தமிழக அரசு முன்வந்துள்ளது.அது மட்டுமல்லாமல் முயன்றால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை விசாரணைக்கு அழைத்து விசாரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் இந்த பிரச்சனைக்கு தாலி கட்டிய நேரம் சரியில்லை என்று ஜோதிடர் ஒருவர் அப்பவே கூறியதாக செய்திகள் வெளியாகிறது.ஜூன் ஒன்பதாம் தேதி 10.20 மணிக்கு நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டியுள்ளார்.

ஆனால் வியாழக்கிழமை 10.11 மணிக்கு புதன் ஹோரை நேரமாக இருந்துள்ளது. அந்த நேரம் திருமணம் நடந்துள்ள நிலையில் கௌரி பஞ்சாங்கத்தின் படி பார்த்தால் அந்த நேரம் அசுப முகூர்த்தம் நேரம் ஆகும்.அப்படி என்றால் எது தொட்டாலும் ஏதாவது தடை ஏற்பட்டு நின்று போகும் என்பதை இது குறிக்கின்றது.

அதனால்தான் திருமணத்தில் நெட் பிலிக்ஸ் நிறுவனத்துடன் கோடியில் பிரச்சனை ஏற்பட்டுதற்போது வாடகை தாய் குழந்தை பிரச்சனையும் உருவாகியுள்ளதாக ஜோதிடர் ஒருவர் கணித்துக் கூறியுள்ளார். இதனால்தான் திருமணம் முடிந்த பிறகும் திருமணத்திற்கு முன்பும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கோவில் கோவிலாக ஏறி இறங்கினர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.