விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிக்கான தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்காக நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் பட்டாளம் ஒன்று தனியாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது.

அதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். மற்ற சீசன்களை விட இந்த சீசனில் முதல் நாளிலிருந்து வீட்டில் பல சண்டைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த முறை கேப்டன் பதவி எதுவும் இல்லை என்பதால் போட்டியாளர்கள் அனைவரும் நான்கு அணிகளாக பிரிந்து வேலைகளை செய்து வருகிறார்கள்.

இதில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ஜி பி முத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஜி.பி முத்துவிற்கு பரிச்சயமான போஸ்ட் பாக்ஸை வீட்டிற்கு கமல் அனுப்பி வைத்துள்ளார்.

உங்களுக்கு எந்த இரண்டு நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது என அந்த போஸ்ட் பாக்ஸ் லெட்டர் ஒன்று இருந்துள்ளது. அதற்கு பதில் அளித்த சி பி முத்து,நயன்தாரா மற்றும் சிம்ரன் என கூறிய நிலையில் என்னுடைய வேலைக்கே வேட்டுவைக்க பார்க்கிறீர்களே என கமல் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#Day7 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/ek6uOyPMvc
— Vijay Television (@vijaytelevision) October 16, 2022