விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் 9 ஆண் போட்டியாளர்கள்,10 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர்.

அதேசமயம் கடந்த வாரம் புதிய போட்டியாளராக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சி மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்களுக்கு இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இன்னும் சொல்லப் போனால் நாற்பதாவது நாளில் நடக்க வேண்டியது எல்லாம் இப்போதே நடக்கிறது என கமல்ஹாசன் கடந்த வாரம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
![]()
இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு தெரிந்த முகங்கள் பலரும் தெரியாத முகங்கள் பலரும் உள்ளே நுழைந்துள்ளனர். இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் டிக் டாக் மற்றும் யூ டியூப் மூலம் பிரபலமான ஜி பி முத்து பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ள நிலையில் இவருக்கென தற்போது சமூக வலைத்தளத்தில் தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்து பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

அது மட்டுமல்லாமல் மக்களை பெரிதளவில் கவர்ந்த போட்டியாளராகவும் இவர் வலம் வருகிறார்.இதனிடையே ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி வீட்டிற்கு செல்ல நினைத்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த சில நாட்களாகவே அவர் பிக் பாஸ் வீட்டில் சந்தோசமாக இல்லை.மேலும் அவர் சகோதரர் ஆனந்தை பிக் பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியேற உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தச் செய்தி ஜி பி முத்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
???????????????????????????????? Thalaiva#GPMuthu #GPMuthuArmy #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBoss pic.twitter.com/33DGJ1ZzjW
— BIGG BOX TROLL (@drkuttysiva) October 19, 2022