நடிப்புக்காக ஒருபோதும் அதை நான் செய்ய மாட்டேன்…. சினிமாவில் இப்படி ஒரு நடிகையா?…. சீரியல் நடிகை வித்யா பேச்சால் வியந்து போன ரசிகர்கள்….!!!

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை தான் வித்யா வினு  மோகன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான வள்ளி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழிகளிலும் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது அதில் அவருக்கு ஜோடியாக நடித்த வினு மோகன்  என்பவரை காதலித்து வந்தார்.

அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது வித்யா சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அபியும் நானும் என்ற சீரியலில் நடித்து வருகின்றார். அந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிப்புக்காக எதையும் செய்யும் கேரக்டர் நான் கிடையாது.

என்னுடைய கணவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு முதலில் கொடுத்தது தாலி தான் . நடிப்புக்காக கூட அதனை ஒருபோதும் நான் கலட்ட மாட்டேன்.ஒருவேளை அப்படி தாலியை கழட்டித் தான் அடிக்க வேண்டும் என்றால் அந்த ப்ராஜெக்ட் எனக்கு தேவையே கிடையாது என வெளிப்படையாக பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் பலரும் திருமணத்திற்கு பிறகு தாலியை கழட்டி வைத்துவிட்டு நடித்து வரும் நிலையில் இப்படி ஒரு தாலி சென்டிமெண்ட் நடிகை சினிமாவில் இருக்கிறாரா என பலரும் ஆச்சரியத்தோடு கமெண்ட் செய்து வருகிறார்கள்.