“இவரைதான் கட்டிக்க போறேன்”…. மாப்பிள்ளையை அறிமுகம் செய்த நடிகை பூர்ணா…. வைரல் புகைப்படம்….!!!!

மலையாள சினிமாவின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் கொடைக்கானல், கந்தகோட்டை, கொடிவீரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார்.

மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். 33 வயதான இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அண்மையில் இவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் சமூக வலைத்தளங்களில் மாப்பிள்ளையை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

தனது குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் அடி எடுத்து வைக்கிறார் பூர்ணா. பூர்ணாவுக்கு நிச்சயம் செய்துள்ள மாப்பிள்ளையின் பெயர் ஷாநீத் ஆசிஃபலி. இவர் சவுதி அரேபியாவில் ஒரு பெரிய நிறுவனத்தில் சிஇஓவாக பணியாற்றி வருகிறார். பூர்ணாவின் திருமணம் தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.