1000 ரூபாய் வரை விற்பனையான பெட்டி இப்போ 50 ரூபாய்…. ஆத்திரத்தில் தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்….!!!!!

தமிழகத்தில் உரிய விலை கிடைக்காத காரணத்தால் தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு விளையும் காய்கறிகளை தினசரி காய்கறி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு செல்வர்.

மேலும் இங்கு கொள்முதல் செய்யப்படும் தக்காளிகளை கேரளா,கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு வியாபாரிகள் அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக 15 கிலோ அளவு கொண்ட ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. தற்போது தொடர்ந்து கனமழை காரணமாக தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதாவது ஒரு பெட்டியின் விலை 50 ரூபாய்க்கு கீழ் சென்றது. காய்கறி சந்தைக்கு நேற்று வியாபாரிகள் வராததால் தக்காளி பழங்கள் விற்பனையாகாமல் கிடப்பில் கிடந்தன. இதனால் கவலையடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த அனைத்து தற்காலிகளையும் குப்பையில் கொட்டிவிட்டு சென்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.