குலசை தசரா விழாவில்…. வேற லெவலில் குத்தாட்டம் போட்ட விஜய் டிவி நடிகைகள்….. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ….!!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த விழாவில் நடிகர்கள் பங்கேற்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கிய ஹை கோர்ட் மதுரை கிளை அண்மையில் உத்தரவிட்டிருந்தது .அதாவது தசரா விழாவில் நடிகர் நடிகைகள் உள்ளிட்டோர் ஆபாசமாக நடனம் ஆடுவதற்கும் ஆபாசமான பாடல்களை ஒழிப்பதற்கும் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.

தசரா விழா மைசூருக்கு அடுத்தபடியாக வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இந்த வருடம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு நடைபெற்றது.

இதில் நடிகர் நடிகைகள் கலந்து கொள்ளலாம் என ஹை கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் விஜய் டிவி நடிகைகள் பலரும் தசரா விழாவில் கலந்து கொண்டனர். அப்போது மேளதாளம் முழங்க அனைவரும் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.