பிக்பாஸ் போட்டியாளர் விக்ரமன் விஜய் டிவி பிரபலமா?…. அதுவும் பிரபல சீரியலில்…. இத்தனை நாள் இது தெரியாம போச்சே….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் கடந்த வாரம் பிரம்மாண்டமாக தொடங்கியது.இந்த நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில் இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும் ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகின்றது. வழக்கம்போல கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசிம் உள்ளிட்ட ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 11 பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 21 பேர் கலந்து கொண்டுள்ளனர். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்துள்ளது. முதல் நாளிலிருந்து வீட்டில் பல சண்டைகள் நடந்து கொண்டிருக்கிறது.

அதே சமயம் இந்த வாரம் ஜி பி முத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முக்கிய பிரபலம் விக்ரமன் குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆன இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

விஜய் டிவியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்தவர். நடிகர் சரத்குமாரின் நிறுவனம் இந்த சீரியலை தயாரித்தது.முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்ட இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் விக்ரம் என்னுடன் இணைந்து மதுமிலா நடித்து இருந்தார்.

ஆரம்பத்தில் இந்த சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் வெறும் 29 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது. பின்னர் இந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது.அதன் பிறகு தான் விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கினார். தற்போதைய இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நிலையில் இவர் நடித்த முதல் சீரியல் இதுதான் என்பது குறித்த இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.