கொட்டும் மழையில் மனைவியுடன் பிரின்ஸ் படம் பார்க்க வந்த சிவகார்த்திகேயன்…. உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் பல திரைப்படங்களும் தற்போது உருவாகி வரும் நிலையில் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள ப்ரின்ஸ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் . சுமார் 475 திரையரங்குகளுக்கு அதிகமாக பிரின்ஸ் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை சமயத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.இந்நிலையில் சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் பிரின்ஸ் திரைப்படத்தை பார்ப்பதற்கு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ரசிகர்கள் வந்தனர். அங்கு நான்கு திரைகளில் ஒரே நேரத்தில் அதிகாலை முதல் காட்சிகள் வெளியிடப்பட்டது.

திரைப்படம் தொடங்கிய 15 நிமிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியுடன் ரோகிணி திரையரங்கில் பால்கனியில் பிரின்ஸ் திரைப்படத்தை கண்டு களித்தார். சிவகார்த்திகேயன் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மாலை அணிவித்து சிவகார்த்திகேயனை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்நிலையில் திரையரங்கில் உள்ளே சிவகார்த்திகேயன் திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.