விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.இதில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இதில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கடந்த வாரம் ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது 19 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

நாள்தோறும் பரபரப்பு மற்றும் சர்ச்சைகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகின்றது.டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு மணி நேரம் எபிசோடு மட்டுமல்லாமல் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் இந்த ஷோ ஒளிபரப்பு செய்யப்படுவதால் ரசிகர்கள் போட்டியாளர்கள் பற்றி பல விஷயங்களையும் தெரிந்து கொள்கின்றனர்.

இதனிடையே இந்த வாரம் அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளார். இந்நிலையில் இந்த சீசனில் அதிகம் அறியப்படாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் இதற்காக பல லட்சம் செலவு செய்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது பிக் பாஸ் வருவதால் ராம் ராமசாமி 10 லட்சம் வரை செலவு செய்தார் என்று மற்ற போட்டியாளர்கள் கூட அவர் அவ்வளவு எல்லாம் இல்லை என்று கூறியுள்ளார்.அதன் பிறகு அவர் 5 லட்சம் ரூபாயை விட குறைவாக தான் செலவு செய்திருப்பதை ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
These guys openly talking about PR Payment ????????????#BiggBossTamil6 #BiggBossTamil #BiggBosspic.twitter.com/M9RE3kV9OL
— BIGG BOX TROLL (@drkuttysiva) October 29, 2022