தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.வம்சி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் தாஸ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,யோகி பாபு மற்றும் சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது.

திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்க்கு பிடித்த மூன்று உணவுகள் குறித்து விஜயின் நெருங்கிய நண்பர் மற்றும் பிரபல நடிகரான சஞ்சீவி மனைவியும் சீரியல் நடிகையுமான ப்ரீத்தி சஞ்சீவ் கூறியுள்ளார். விஜய்க்கு மிகவும் பிடித்தது மட்டன் கீமா, குலாப் ஜாமுன் மற்றும் பிரியாணி என இந்த மூன்று உணவுகளும் பிடிக்கும். விஜய் மற்றும் சஞ்சீவ் கல்லூரியில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகி வரும் நிலையில் தற்போது விஜய்க்கு மிகவும் பிடித்த உணவு என்ன என்பது குறித்து சஞ்சீவ் மனைவி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
