நம்ம தல அஜித்தின் மகளா இது?…. ஹீரோயினி போல் இருக்காங்களே…. பொன்னியின் செல்வன் படத்திற்கு அம்மாவுடன் வந்த அனோஸ்கா…. வைரல் வீடியோ….

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். ஏ ஆர் ரகுமான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 வருகின்ற நேற்று உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்நிலையில் மூன்றே நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 230 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

இதனிடையே நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி அஜித் தனது மகளுடன் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அஜித்தின் மகள் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்து ஹீரோயினி போல் காட்சி அளிப்பதாக பலரும் கமண்ட் செய்து வருகிறார்கள்.