தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். ஏ ஆர் ரகுமான் இசையில் ஜென்டில்மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலின் தொடக்க வரிகளை தனது மழலை குரலில் பாடியவர் இவர்தான். அங்கிருந்து இசை சிறகை விரித்து பறக்க தொடங்கியவர் வசந்தபாலன் இயக்கிய வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன.

இவருக்கு எப்போதோ தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அன்னையில் தான் சூரரைப் போற்று திரைப்படத்தின் பின்னணி இசைக்காக விருது பெற்றார். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜிவி பிரகாஷிடம் கல்லூரி மாணவி ஒருவர் காலேஜ் எக்ஸாம் பீஸ் கட்ட உதவி கேட்டுள்ளார்.

அதில் , ஹாய் சார், என தனது பெயரை அறிமுகம் செய்துவிட்டு கும்பகோணம். நான் பிசிஏ படித்து வருகிறேன்,இந்த மாதம் தேர்வு தொடங்கும் நிலையில் அதற்காக பீஸ் கட்ட உதவி செய்யுங்கள் என கூறியுள்ளார். இதனைப் பார்த்த ஜீவி பிரகாஷ் உடனடியாக அவருக்கு உதவி செய்தார்.மாணவியின் பதிவுக்கு ரிப்ளை செய்த ஜிவி பிரகாஷ் உங்களின் G PAY நம்பருக்கு பணம் அனுப்பிவிட்டேன் என கூறியுள்ளார். இந்தச் செய்தியை தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பலரும் அது ஃபேக் ஐடி என்றும் நாளை தேர்வு வைத்துக் கொண்டே இன்று கட்டணம் கட்ட மாட்டார்கள் என்றும் அனைத்து கல்லூரி விடுமுறையில் இருக்கும் போது எந்த கல்லூரியில் தேர்வு வைக்க மாட்டார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். எனவே இது ஒரு பேக் ஐடி என தெரிகிறது. கடந்த சில நாட்களாகவே பல மோசடி சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் அதுபோன்ற ஒரு மோசடியாக கூட இருக்கலாம் என ரசிகர்கள் பலரும் கமாண்ட் செய்து வருகின்றனர்.இருந்தாலும் கேட்ட உடனேயே உதவி செய்த ஜிவி பிரகாசுக்கு பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
