சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வருகிறார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எந்த அளவிற்கு வசூலை அள்ளுமோ அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் படங்களும் வசூல் சாதனை படைத்துள்ளன. மிமிக்ரி செய்வதில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து பிரின்ஸ் மட்டும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சிவ கார்த்திகேயன் டெலிவிஷனில் வேலை பார்த்த போதே அவரின் மாமன் மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது ஒரு மகளும் மகனும் உள்ளனர். மேலும் சிவகார்த்திகேயனுக்கு கௌரி மனோகரி என்ற அக்காவும் ஒருவர் இருக்கிறார். அவர் டாக்டராக உள்ளார். இந்நிலையில் தனது அக்காவின் கணவருடன் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
