மீண்டும் அந்த கேள்வியை கேட்டு கமல்ஹாசனை கதறவிட்ட ஜி.பி முத்து…. என்னால முடியல டா சாமி…. வாயடைத்து போன கமல்….!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. முதல் நாளிலிருந்து பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்குகளை கொடுத்து வருகிறது.இன்னும் ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில் பல பிரச்சனைகள் மற்றும் பஞ்சாயத்துக்கள் என பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கின்றன.அதிலும் குறிப்பாக ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி இடையே உச்சகட்ட பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே முதல் வாரமே போட்டியாளர்களுக்கு மத்தியில் கடும் வாக்குவாதமும் சண்டையும் ஆரம்பித்துவிட்டது. அதில் ஜி பி முத்துவும் சிக்கிவிட்டார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடக்க விழாவில் முதல் ஆளாக சென்ற ஜிபி முத்து தனியாக இருப்பதால் கதறி புலம்பினார். அவரை ஆறுதல் படுத்த கமல்ஹாசன் ஆதம் ஏவாள் பற்றி கூறிய நிலையில் அதற்கு ஜிபி முத்து ஆதமா?, என்று ரியாக்சன் கொடுத்து கமல்ஹாசனை கதற விட்டார்.

தற்போது ஒரு வாரம் முடிவில் சனிக்கிழமை நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ள நிலையில், முதலில் மகேஸ்வரியை கலாய்த்து வந்த கமல்ஹாசன் அதன் பிறகு ஜிபி முத்து அது கையில் வைத்திருந்த பாதாமை காட்டியுள்ளார்.

அதற்கு கமல், பாதாம் தெரியுது ஆதம் தெரியலையா, ஆதம் எப்படி கோச்சிட்டாரு பாருங்க என கிண்டலாக கூறினார். அதற்கு ஜிபி முத்து ஆதம்மா எங்க இருக்காரு என ரியாக்ஷனை கொடுத்தார். இதனைக் கேட்டு வாயை பிளந்த கமல்ஹாசன் ஷாக் ஆகினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.