தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. அவர் அடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ள நிலையில் அந்த வரிசையில் இடம் பிடித்த படம் தான் சந்திரமுகி. கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படத்தை வாசு இயக்கி இருந்த நிலையில் பிரபு, ஜோதிகா, வடிவேலு மற்றும் நயன்தாரா உள்ளிட்ட பல முன்னாடி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

மேலும் இந்த திரைப்படம் 900 நாட்கள் திரையரங்கில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்தத் திரைப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக ஸ்வர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஸ்வர்ணா மேத்யூ. இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம்உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்து வந்த ஸ்வர்ணா சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார்.

இந்த படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில பழங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வந்தார். அப்படி இளமையான தோற்றத்துடன் ரசிகர்களை கவர்ந்த சொர்ணா தற்போது ஆளை அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போய் உள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகளுக்கு தாயாகியுள்ள அவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.