விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாலும் அதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்களை கொடுத்து வருகிறது. முதல் நாளே போட்டியாளர்கள் பலரும் மோதிக்கொண்டனர். அடுத்தது விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடையாளமாக இருப்பதே பிக் பாஸின் கம்பீரமான குரல் தான். ஆனால் அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது யாருக்கும் தெரியாது.இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுக்கும் நபரின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அவரின் பெயர் சச்சிதானந்தம்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் வரை வேலை செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
