பொன்னியின் செல்வன் வாய்ப்பை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்…. அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா?…. வைரல் புகைப்படம் இதோ….!!!!

உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது .

 

இதனிடையே முதல் ஷோவில் இருந்து சிறந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கிறது.பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலமாக நீண்ட காலத்திற்குப் பிறகு திரிஷா கம் பேக் கொடுத்துள்ளார். அதில் குந்தவை ரோலில் அவரின் லுக் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரைப் போலவே கெட்டப் போட்டு பல நடிகைகள் போட்டோ சூட் நடத்தி அதனை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் குந்தவை கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் தான் தேர்வாகியதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாத்து திரைப்படத்தில் நடிப்பதற்காக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.ஒருவேளை பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தால் எப்படி இருந்திருப்பார் என்று போஸ்டர் டிசைன் ஒன்றை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.