இதல்லவ்வா சாதனை…. “நிறத்தை பார்த்து விமர்சிக்கப்பட்டவர்”…. இன்று உலகமே வியந்து பார்க்கும் தேசிய விருது நடிகை….!!!!!

நடிப்பின் மீது கொண்ட காதலால் நாடகங்களிலும் குறும்படங்களிலும் நடிக்க தொடங்கியவர் தான் காளீஸ்வரி ஸ்ரீனிவாசன். நிறத்தைப் பார்த்து விமர்சிக்கப்பட்டவரான காளீஸ்வரி நடித்த எல்லா படங்களுக்கும் விருது கிடைத்துள்ளது. காளீஸ்வரி கதாநாயகியாக நடித்த முதல் படம் தீபன் தேசிய அளவில் பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய “தங்கப்பனை” விருதை பெற்றது.

இவர் கதாநாயகியாக இரண்டாவது படமான சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. இப்படத்தின் மூன்று கதைகளில் முதல் கதையின் நாயகியாக நடித்திருந்த இந்த படம் பல சர்வதேச விருதுகளை வென்றிருந்த நிலையில் தற்போது மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளது .

வெள்ளித்திரையில் வெற்றி பெற்று இருந்தாலும் தற்போது நாடகங்களிலும் காளீஸ்வரி தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் வருகிறார். மனோ தத்துவம் படித்த காளீஸ்வரி நடிப்பு மீதான காதலால் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்து வருகிறார்.

இது குறித்து பேசிய காளீஸ்வரி, முதல் முறையாக சினிமாவில் தேர்வுக்கு சென்றிருந்தபோது, எந்த பதற்றமும் இல்லாமல் கேமராவுக்கு முன்னால் என்னால் இயல்பாக நடிக்க முடிந்தது. அதனால் என்னை எளிதில் தேர்வு செய்தார்கள். அவர்களுடன் பணியாற்றியது ஒரு நாள் நல்ல அனுபவமாக இருந்தது. அதனால் படப்பிடிப்பு பிரான்ஸ் நாட்டில் இருக்கும் என்று கூறிய போது தயக்கமில்லாமல் நான் சம்மதித்து விட்டேன். என்னுடைய ஆளுமை அறிந்து கொள்வதற்கு கலை ஒரு கருவியாக இருந்தது என்று மிகுந்த மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.