“இந்த மனசு யாருக்கு வரும்”…. கட்டு கட்டாய் பணம்….. மொத்தத்தையும் முருகனுக்கே கொடுத்த தேவா…. !!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக என்றும் பலரது மனதில் நீங்காத இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் தேவா. 1989 ஆம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மகராசா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அவ்வகையில் வைகாசி பொறந்தாச்சு, வசந்தகால பறவை, பாட்ஷா மற்றும் அவ்வை சண்முகி உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு பல வெற்றி படங்களை முக்கிய பங்கியாற்றியதோடு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தேவா என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கானா பாடல் தான்.

ஆனால் அதே நேரத்தில் மெலோடி பாடல்களையும் அள்ளிக் கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவா. இவர் தற்போது திரைப்படங்களில் அவ்வளவு அதிகமாக பணியாற்றாத நிலையில் இசை மற்றும் பிற ஆல்பங்கள் சிலவற்றை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் அண்மையில் சுவாமி தரிசனம் செய்தார்.

அப்போது,திருச்செந்தூர் முருகப் பெருமானுக்காக கந்த முகமே என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளதாகவும், அந்தப் பாடல் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதன் மூலம் கிடைத்த மொத்த பணத்தையும் முருகனுக்கே வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.  அது மட்டுமல்லாமல் இனிவரும் பணம் மொத்தத்தையும் முருகனுக்கே வழங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த மனப்பான்மைக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.