விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஒரு பக்கம் ரசிகர்கள் இருந்தாலும் அதனை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இதுவரை இதில் ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அண்மையில் தொடங்கியது. இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்கள், 10பெண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதில் முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்களை கொடுத்து வருகிறது.

இதில் போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளவர்தான் சீரியல் நடிகை ஆயிஷா.இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்தார். அதன் பிறகு விஜய் டிவியை விட்டு வெளியேறிய இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் தனது வேறுபட்ட நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தார்.

மீண்டும் விஜய் டிவிக்கு வந்துள்ள ஆயிஷா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சீரியலின் துணை இயக்குனர் பற்றி மிகவும் மோசமாக பேசியுள்ளார் ஆயிஷா .சீரியலின் படப்பிடிப்பு சமயத்தில் ஆயிஷா தூங்கிக்கொண்டு இருந்தால் அவரை எழுப்ப வரும் துணை இயக்குனர்களை ஆயிஷா அடித்து விடுவாராம்.

அது மட்டுமல்லாமல் காலால் எட்டி உதைப்பார். அதனால் பல துணை இயக்குனர்கள் அவரை தூக்கத்தில் இருந்து எழுப்ப பயப்படுவார்கள் என ஆயிஷா பிக்பாஸ் வீட்டில் மிகத் திமிராக பேசியுள்ளார்.பிக் பாஸ் வீட்டில் தற்போது சிரித்து பேசி ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆயிஷாவின் மற்றொரு முகம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.