‘பயங்கரமான ‘மொக்க’ படமுன்னு சொன்னாங்க’ – 14 நாட்களில் வசூல் 907 கோடி ரூபாயா?

சில படங்கள், பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், திடீரென தோல்வி படமாக அமையும். சுமாராக ஓடும் என எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள், மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஆனால், படம் ரிலீஸ் ஆன அன்றே, இந்த படம் பிடிக்கவில்லை. ஏற்கனவே வந்த படங்களில் இருந்து கதையை, காட்சிகளை காப்பியடித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது என, ரசிகர்கள் விமர்சனம் செய்த ஒரு படம் மிகப்பெரிய வசூலை பெற்றிருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. படம் நன்றாக விமர்சனங்களையும் தாண்டி அந்த படம் இதுவரை, 907 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. இன்னும் சில தினங்களில் ரூ. ஆயிரம் கோடியை வசூல் எட்டவும் அதிக வாய்ப்புள்ளது. அது, ஷாருக்கான் – நயன்தாரா நடிப்பில், அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படம்தான் அது.

கடந்த 7ம் தேதி, ‘ஜவான்’ படம் ரிலீஸ் ஆன நிலையில், 14 நாட்களில் அதாவது இரண்டு வாரங்களில், வசூலித்தது 907 கோடி ரூபாய் என்பது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இயக்குநர் அட்லீி இயக்கிய படங்கள் என்றாலே, அதில் பழைய படங்களில் சாயல் இருக்கும் என்ற விமர்சனம் உள்ளது. அதிலும் ‘ஜவான்’ படம் வெளியான அன்று, படத்தை பார்த்த பலரும், 23 படங்களில் இருந்து கதையை, காட்சிகளை காப்பியடித்து இந்த படம் வந்துள்ளது. நிச்சயமாக, இந்த படத்தை பார்க்க யாரும் வராதீர்கள் என்றே, சமூக வலைதளங்களில், பலரும் அதிருப்தியாக தெரிவித்தனர், முகநூல் பதிவுகளிலும் இந்த படத்தை பற்றி பலரும் கலாய்த்து, அட்லீயை கிண்டலடித்து இருந்தனர்.

இந்நிலையில், ‘ஜவான்’ படம், 14 நாட்களில், 907.54 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக, அந்த படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் மூலம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. பெரும்பாலான ரசிகர்களால் நன்றாக இல்லை என விமர்சிக்கப்பட்ட படம், தொடர்ந்து வெற்றிப்பாதையில் சென்றது எப்படி என்பதுதான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணங்கள் பல இருந்தாலும் முக்கிய காரணங்கள் இரண்டுதான். ஷாருக்கான் நடித்த ‘பதான்’ மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மூவி. அதையடுத்து வந்த படம் என்பதால், இந்த படத்தை ரசிகர்கள் அதிகளவில் விரும்பினர். நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, சஞ்சய் தத், தீபிகா படுகோன், யோகிபாபு போன்ற நட்சத்திர நடிகர்கள், அனிரூத் இசை போன்ற காரணங்களாலும், இந்த படத்தை காண அதிகளவில் ரசிகர்கள் ஆர்வம் காட்டியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.