உங்களுக்கு என்ன வேண்டும் என்று எனக்கு தெரியலையே – பின் தொடர்ந்து வந்து நபரை பார்த்து பயத்தில் கத்திய பிரபல நடிகை

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து, 77 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் பொது இடங்களில், தனியாக நடந்து செல்லும் பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கூட பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அதனால், பெண்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்க, தொடர்ந்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் வாகனங்களில் தனியாக பயணிக்கும் போதும், நடந்து செல்லும்போதும் அந்நிய நபர்களை கண்டால் பெண்கள் அச்சமடையும் நிலையே நீடிக்கிறது. அதுவும் மும்பையில், தன்னை பின் தொடர்ந்த மர்ம நபரால் ஒரு பிரபலமான நடிகை அச்சமடைந்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன், உலக சினிமா வரலாற்றில் இடம்பிடித்தவர். தென்னிந்திய நடிகர்களில் புகழில் உச்சம் தொட்ட.நடிகர்களில் தமிழில் மிக முக்கியமானவர். மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவராகவும், தமிழக அரசியலில் முன்னிலையில் இருந்து வருகிறார். இவரது மகளுக்கே இப்படி ஒரு சம்பவமா என்பதுதான் பலரது கேள்வியாக எழுந்துள்ளது.

 

ஸ்ருதிஹாசன் தமிழில் ஏழாம் அறிவு, வேதாளம், புலி, த்ரீ, சிங்கம் 3, பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தமிழை காட்டிலும், தெலுங்கு படங்களில் ஸ்ருதிஹாசன் அதிகமான படங்களில் நடித்து வருகிறார்.தவிர, இசை கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மும்பையில் தனியாக வசித்து வருகிறார்.

சமீபத்தில், கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் மும்பையில், குறிப்பிட்ட பகுதியில் நடந்து சென்றிருக்கிறார். அப்போது, கூலிங் கிளாஸ் அணிந்தபடி டிப்டாப் உடையில் ஒரு மர்ம நபர் பின்தொடர்ந்து இருக்கிறார். தன் பின்னால், அந்த நபர் தொடர்ந்து வருவதை பார்த்து, அச்சமடைந்த அவர் ஒரு கட்டத்தில், ஆங்கிலத்தில் அவரை பார்த்து, உங்களுக்கு என்ன வேண்டும் என்று எனக்கு தெரியலையே, என ஆங்கிலத்தில் கத்துகிறார்.

நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு பிரபலமான நடிகை. தமிழ், தெலுங்கு, இந்தியில் நிறைய படங்களில் நடித்துக்கொண்டு இருப்பவர். தன்னை பின்தொடர்ந்தவர் ரசிகரா, மர்ம நபரா என்பதை கூட அறிய முடியாமல் அந்த நேரத்தில் கடுமையான அச்சத்தில் தவித்து இருக்கிறார். பெரிய நடிகரின் மகள், பிரபலமான நடிகை என்ற நிலைகளை கடந்து, ஒரு பெண்ணாக அந்த இடத்தில் அவர் அச்சப்பட்டிருக்கும் அந்த வீடியோ, இப்போது வைரலாகி வருகிறது.