‘ப்ரீ’ புக்கிங் வசூலில் மாஸ் காட்டிய தளபதி – 25 நாட்களுக்கு முன்பே இத்தனை கோடி வசூலா…

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய, லியோ படம், அடுத்த மாதம் 19ம் தேதி, ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்னதாக, வரும் 30ம் தேதி, லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை, பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கு முந்தைய படங்களான பீஸ்ட், வாரிசு படங்கள் சரியாக போகவில்லை. குறிப்பாக பீஸ்ட் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையே தந்தது. வாரிசு படமும், ரசிகர்களுக்கு போதிய திருப்தியளிக்கவில்லை.இந்நிலையில், கமல்ஹாசனின் நடிப்பில் விக்ரம் என்ற பிளாக்பஸ்டர் படத்தை தந்த லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவும் நடித்திருப்பதால், நிச்சயம் படம் வேற லெவலில் இருக்கும் என, இப்போதே உற்சாகத்தில் உள்ளனர். இன்னும் படம் ரீலீஸ் ஆக 25 நாட்கள் உள்ள நிலையில், இப்போதே ஆர்வமாக காணப்படுகின்றனர்.இப்போது, உலகம் முழுவதும் லியோ படத்துக்கு, ப்ரீ புக்கிங் நடந்து வருகிறது. இதன் வாயிலாக, ரசிகர்கள் லியோ படத்தை காண, டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை ரூ. 3.8 கோடி ரூபாய் வரை ப்ரீ புக்கிங் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. படம் ரிலீஸ் ஆகி 3 வாரங்களுக்கு மேல் உள்ள நிலையில், இப்படி ப்ரீ புக்கிங் ரூ. 3.8 கோடியை கடந்திருப்பது மிகப்பெரிய வசூல் சாதனை என்பதால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.