தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவரின் நிஜ பெயர் ஷாம்னா காசிம். பின்னர் சினிமாவிற்காக பூர்ணா என்று மாற்றிக் கொண்டார். இவர் முதல் முதலாக நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.

அதை தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் ஆடு புள்ளி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான தலைவி, திரிஷ்யம், அகண்டா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இறுதியாக தமிழில் தலைவி மற்றும் விசிதிரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பூர்ணாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது .அந்த புகைப்படங்களை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
