பாட்டியை நினைத்து தேம்பி தேம்பி அழுத மகேஷ் பாபுவின் மகள்…. கண்ணீர் விட்ட மகேஷ்பாபு…. கலங்க வைக்கும் வீடியோ….!!!!

சவுத் இந்தியா பிரின்ஸ் மற்றும் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றுரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் மகேஷ் பாபு. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன். டோலிவுட்டில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த 1979 ஆம் ஆண்டு நீடா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு ராஜகுமாரடு என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி நேற்று அதிகாலை உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவர் பலம்பெரும் நடிகரான கிருஷ்ணாவின் மனைவி.70 வயதான இந்திரா தேவியின் மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சில நாட்களாகவே உடல்நல குறைவாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று காலமானார்.

இதனைத் தொடர்ந்து அவரின் உடல் அஞ்சலிக்காக ஹைதராபாத்தில் உள்ள பத்மாலயா ஸ்டூடியோவில் வைக்கப்பட்டது. அங்கு நேரில் சென்ற திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் பாட்டி இந்திரா தேவியின் உடலை பார்த்து மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா தேம்பி தேம்பி அழுதார். அதனைப் பார்த்த மகேஷ் பாபு தனது மகளை மடியில் உட்கார வைத்து ஆறுதல் தேற்றினார். இதனிடையே சித்தாராபாட்டியின் மறைவை நினைத்து தேம்பி தேம்பி அழும் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.