அடடே ஆள் இப்படி மாறிட்டாரே…. டிடியின் முன்னாள் கணவர் இப்போ எப்படி இருக்கா தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி. இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள காபி வித் காதல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாததால் விரைவில் விவாகரத்தில் முடிந்தது. தற்போது டிடி ஒரு குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகின்றார்.

இதனிடையே விவாகரத்திற்கு பிறகு இருவரும் அவரவர் வாழ்க்கையை தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.டிடிஎன் முன்னாள் கணவர் ஸ்ரீ காந்த் திரையுலக நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வளம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அண்மையில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ஸ்ரீகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.