
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. திருமணத்துக்கு பிறகும், முன்பை போலவே பிஸியான நடிகையாக ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். துவக்கத்தில் சிலம்பரசன், பிரபுதேவா உள்ளிட்டோருடன் காதல் வயப்பட்ட நயன்தாரா, பின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். நானும் ரவுடிதான் என்ற விக்கி இயக்கிய படத்தில் நயன்தாரா நடித்த பிறகு, இருவரும் காதலர்களாகினர். பல இடங்களுக்கு இருவரும் ஜோடியாக வந்து அசத்தினர்.ஏழு ஆண்டுகளுக்கு பின் விக்கி – நயன் திருமணம் மாஸ் ஆக நடந்து முடிந்தது. திருமணமாக நான்கே மாதங்களில், வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளுக்கு நாங்கள்தான் பெற்றோர் என அறிவித்தனர். இது பலவிதமான சர்ச்சைகளை கிளப்பியது.
வாடகைத்தாய் மூலம் பிள்ளைகள் பெறுவதற்கான சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்ற புகார் எழுந்தது. பின், அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதாகவும், முறைப்படி எல்லாம் நடந்திருப்பதாகவும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். இதையடுத்து, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கிடைத்தது.தங்களது குழந்தைகளை நீண்ட நாட்களாக வெளியில் காட்டாமல் இருந்த விக்கி – நயன் ஜோடி அக்குழந்தைகளுக்கு உயிர், உலகம் என பெயர் வைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். கடந்த மாதத்தில், குழந்தைகளின் முகங்களை சமூக ஊடகங்களுக்குே காட்டினர். இதைத்தொடர்ந்து இப்போது மலேசியாவில்,தங்களது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பதிவிட்டு, முதல் பிறந்த நாள் கொண்டாட்டமாக அதை தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இப்போது, இணையத்தில் வைரலாகி வருகின்றன.