என்னது, நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம் பாதியோடு நின்றதா? – மாஜி காதலர் சொன்ன உண்மை தகவலுங்க இது

நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த முன்னணி நாயகிகளில் ஒருவர். கீதாகோவிந்தம் படத்தின் வாயிலாக, ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானார். பிளாக்பஸ்டர் படமாக அமைந்த அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில், ராஷ்மிகாவின் நடிப்பு ரசிகர்களின் பலத்த பாராட்டை பெற்றது. இதைத்தொடர்ந்து விஜய் நடித்த வாரிசு படத்தில் ஜோடியாக நடித்தார். தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா இந்தி படவுலகிலும் தனது காலடியை பதித்துள்ளார்.இந்நிலையில், தெலுங்கு படவுலகை சேர்ந்த நடிகர் ஒருவரை, ராஷ்மிகா காதலித்ததும், இருவரும் திருமணம் செய்ய இருந்த நிலையில், பாதி வரை சென்ற திருமண முயற்சிகள் நின்று போனதாகவும் அவரது மாஜி காதலர், சமீபத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் தெலுங்கு நடிகர் ரக்சித் ஷெட்டி. இருவரும் மிக தீவிரமாக காதலித்த நிலையில், திருமணம் பாதியோடு நின்றுவிட்டது. அதன்பிறகு அவரவர் வழியில், சினிமா பயணத்தை தொடர்ந்து வருகின்றனர். ஆனால், அவர்கள் திருமணம் பாதியோடு நின்று போனதற்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை,இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ரக்சித் ஷெட்டி, இப்போதும் இருவரும் மொபைல் போனில், மெசேஜ் வழியாக தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம். திருமணம் நின்றுபோனதால், நட்பு முறிந்துவிடவில்லை. அவரது படம் வெற்றி பெற்றால் நானும், என் படம் வெற்றி பெற்றால், அவரும் பாராட்டிக்கொள்கிறோம். அவரது திரையுலக கனவுகள் தொடர்ந்து நிறைவேறி வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.