தமிழ் சினிமாவில், பல விதமான விமர்சனங்களில் அடிக்கடி சிக்கிக் கொள்பவர்தான் நயன்தாரா. சினிமாவில் நடிக்க வந்த துவக்கத்தில் சிலம்பரசன், பிரபுதேவா போன்றவர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர் நயன்தாரா. பின், நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.ஏழு ஆண்டுகளாக தொடர்ந்த காதலுக்கு பிறகு, கடந்தாண்டில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக்கொண்ட போதும், கடுமையான விமர்சனங்களை சந்தித்தனர். ஆனால், திருமணத்துக்கு பிறகும், நயன்தாரா பிஸியான நடிகையாகவே இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் நடித்த நயன்தாராவின் சொத்து மதிப்பு 200 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நயன்தாரா சொந்தமாக ஜெட் விமானம் ஒன்றை வைத்திருப்பது இப்போது வைரலாகி வருகிறது.
தங்களது சொந்த பயன்பாட்டுக்காக ஜெட் விமானங்களை வைத்திருக்கும் மாதுரி தீட்சித், பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி போன்ற பாலிவுட் ஸ்டார் நடிகைகளின் வரிசையில், இப்போது நயன்தாராவும் இணைந்துவிட்டார். உலகில் பணக்கார நடிகைகளில் ஒருவராக அவரும் மாறிவிட்டார்.நயன்தாரா பயன்படுத்தி வரும் ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ.50 கோடி என கூறப்படுகிறது. நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் இந்த பிரைவேட் ஜெட் விமானத்தை தனிப்பட்ட பயணங்கள் மற்றும் தொழில்சார்ந்த பயணங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். தனியார் ஜெட் விமானத்தின் உட்புறத்தின் சில படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் கவர்ந்து வருகிறது. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி கமல் போன்றவர்களே விமானத்தில் டிக்கெட் வாங்கி பயணிக்கிற நிலையில், நயன்தாரா இப்படி வேற லெவலில், வாழ்கிறாரே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.