அப்படி இருந்த நான், எப்படி எல்லாமோ ஆயிட்டேன் – மேடையில் அழாத குறையாத பேசிய பிரபல நடிகர்

தமிழ் சினிமாவை பொருத்த வரை, மார்க்கெட் இருக்கும் வரை ஒரு நடிகருக்கு மரியாதையும், அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பும், ரசிகர்களின் மனதில் அங்கீகாரமும் கிடைக்கும். அடுத்த சில படங்கள் சரியாக போகவில்லை என்றால், அந்த நடிகரை கண்டுகொள்ள யாருமே இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் இயக்குநர், நடிகர் எஸ்.ஜே சூர்யா. சமீபத்தில் மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்டில் பங்கேற்ற அவர் சில விஷயங்களை மனம் விட்டு பேசினார். அது அவரது மனதில் இருந்து வந்த உண்மையான வார்த்தைகளாகவே இருந்தன.நான் கடந்த 2004ம் ஆண்டில் நியூ படத்தையும், 2005ம் ஆண்டில் அன்பே ஆருயிரே படத்தையும் எடுத்தேன். இரண்டு படங்களும் அடித்து பட்டைய கிளப்பியது. கோயம்புத்தூர் ஏரியாவில் நியூ படம் ஒன்னே கால் கோடி ரூபாய்க்கும், அன்பே ஆருயிரே படம் ஒரு கோடிக்கும் விற்பனையானது. அப்படி ஒரு உயர்ந்த இடத்தில் நான் எப்படி இருந்திருக்கணும், ஆனால், எப்படி இருந்தேன். அந்த வலி, வேதனை எல்லாம் என்னால் மறக்கவே முடியாது.
திடீரென என்னை உயர்ந்த இடத்தில் வைத்துவிட்டு, கடவுள் திடீரென கண்ணை பிடுங்கியது போல் காணாமல் போய், செத்து விழுந்து பல ஆண்டுகளுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்தேன்.இறைவி படம் மூலம், மீண்டும் எனக்கு ஒரு நல்ல என்ட்ரி, கார்த்திக் சுப்புராஜ் கொடுத்தார். அப்புறம், மாநாடு படம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்போது மார்க் ஆண்டனி பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. அன்பே ஆருயிரே படம் வந்த போது மக்கள் என்னை எவ்வளவு ரசித்தார்கள், அவர்கள் மனதில் எவ்வளவு இடம் கொடுத்தார்கள். அதை எல்லாம் இழந்துவிட்டேனே என வருந்திய எனக்கு, இந்த படம், மக்கள் மனதில் மீண்டும் 75 சதவீத இடத்தை என்னை பிடிக்க வைத்துவிட்டது, என்று பேசினார் எஸ்ஜே சூர்யா.