நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர், வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். சில தினங்களுக்கு முன், மலேசியாவில் தனது குழந்தைகளின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டங்களை, புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் பரவ விட்டிருந்தனர். அந்த படங்கள் வைரலாகின. அதுமட்டுமினறி, பாலிவுட்டில் நயன்தாரா ஷாருக்கானுடன் ஜோடியாக நடித்த முதல் படமே, வேற லெவலில் வெற்றி பெற்றதால், நயன்தாராவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.இந்நிலையில், நயன்தாரா தனது பெயர் குறித்து பேசிய ஒரு வீடியோ கிளிப்பிங்ஸ் வைரலாகி வருகிறது. நயன்தாராவின் உண்மையான பெயர் டயானா மரியா குரியன். கடந்த 2003ம் ஆண்டில், மனசினக்காரே என்ற மலையாள படத்தில் நடித்துதான் அவர் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழ் படங்களில் நடித்து, இன்று புகழின் உச்சியில் இருக்கிறார்.நயன்தாரா என்ற பெயர் தனக்கு எப்படி வந்தது என்பதை அவரே சுவாரசியமாக அந்த வீடியோ கிளிப்பிங்கில், தொகுப்பாளர் ரம்யாவிடம் கூறி இருக்கிறார்.நான் முதலில் மலையாள படம் ஒன்றில் அறிமுகமானேன். அப்போது அந்த படத்தின் இயக்குநர் சத்யன் அந்திகாட், என் பெயரை மாற்ற வேண்டும் என்றார். எனக்கு அப்போது எதுவுமே தெரியாது. அதனால் ஓகே என்றேன். ஆனால், ரொம்ப நாட்களாகியும் எனக்கு பெயர் வைக்கவில்லை. அவர் படத்துக்கும் பெயர் வைக்கவில்லை. எனக்கும் பெயர் வைக்கவில்லை. எனக்கு பெயர் வைப்பீங்களா, மாட்டீங்களா என ஒரு நாள் கேட்டேன்.அப்போது அவர் 20, 30 பேர் கொண்ட ஒரு நேம் லிஸ்ட்டை கொடுத்து, நீங்களே செலக்ட் பண்ணிக்குங்க, நான் ஷாட்டுக்கு போறேன் என கூறிவிட்டுச் சென்றுவிட்டேன். அப்படி அந்த லிஸ்ட்டில் இருந்து, நயன்தாரா என்ற பெயரை நானே செலக்ட் செய்தேன். இயக்குநர் வந்த பிறகு, இந்த பெயர் எனக்கு பிடிச்சிக்கு, நான் சொன்ன போது, நானும் அந்த பெயரை தான் வைக்கலாம் என்று இருந்தேன் என்றார், என்று சிரித்தபடி வீடியோவில் கூறியிருக்கிறார் நயன்தாரா.