அம்பானிக்கு ஓகே, ஷாருக்கானுக்கு நோ சொன்ன தமிழ் பட நடிகை – பாலிவுட்டில் இனி இடம் கிடைப்பது கஷ்டம்தான்…

உலக பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. அவரது வீட்டில், கடந்த திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதில் ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான், மாதுரி தீட்சித், தீபிகா படுகோன், கியாரா அத்வானி, அஜய் தேவ்கன், ஆலியாபட், சுனில் ஷெட்டி என பாலிவுட் நட்சத்திர கூட்டமே கலந்துகொண்டது. இதில் விக்னேஷ் சிவன் -நயன்தாரா, அட்லீ- பிரியா ஆகியோரும் மகிழ்ச்சியாக கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதுவரை தமிழில் லேடி சூப்பர் ஸ்டராக முன்னணியில் இருந்துவரும் நயன்தாரா, இப்போது இந்தி படவுலகில் ‘ஜவான்’ படம் மூலம் கால் பதித்து இருக்கிறார். முதல் படத்திலேயே பாலிவுட் மெகா ஸ்டார் ஷாருக்கானுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இப்போது, முகேஷ் அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கூட, பாலிவுட்டில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான்.

ஆனால், ஜவான் படத்தில் ஹீரோயின் ஆக நடித்த நயன்தாராவை, அந்த படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஷாருக்கான் அழைத்த போது, அவர் செல்லாமல் மறுத்துவிட்டார். அதற்கு பிறகு மும்பையில் நடந்த படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொள்ள ஷாருக்கான் அழைத்தும், நயன்தாரா செல்லவில்லை. இதனால், ஷாருக்கானுக்கு பலத்த ஏமாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், முகேஷ் அம்பானி வீட்டில் நடந்த விழாவில் நயன்தாரா கலந்துகொண்டது ஷாருக்கானுக்கு பயங்கர அதிருப்தியை தந்துள்ளது. பாலிவுட்டில் காலடி வைத்த முதல் படத்திலேயே, இந்தி சூப்பர் ஸ்டார் நடிகரின் அதிருப்தியை, வெறுப்பை சம்பாதித்த நயன்தாரா, தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்புகளை பெறுவாரா, என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.