OMG: பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீ வஸ்தா மாரடைப்பால் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….!!!

பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரபலமானவள் தான் நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் முதலில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி பின்னர் காமெடியனாக உயர்ந்தவர். 59 வயதாகும் இவர் புது டெல்லியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு ஜிம்மில் கீழே சரிந்து விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தனர். மருத்துவமனையில் அனுமதித்த பிறகு அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. ஆஞ்சியோ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது. அவரின் மறைவிற்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.