பல மாதங்களாக துபாயில் பதுங்கிய பிரபல வில்லன் நடிகர் – பொறுமை இழந்த போலீசார் வைத்த மெகா சைஸ் ஆப்பு

சென்னையை தலைமையிடமாக ஆருத்ரா என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது, வாடிக்கையாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறிய நிலையில், ஆயிரக்கணகான வாடிக்கையாளர்கள் இதில் பணத்தை முதலீடு செய்தனர். அந்த வகையில் ஆருத்ரா நிறுவனம் 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அதில் 22 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த ஆருத்ரா நிதி நிறுவனத்தில், தாரை தப்பட்டை, மருது உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த ஆர்கே சுரேஷ், 12 கோடி ரூபாய் பெற்றிருக்கிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியிலும் நிர்வாகியாக உள்ளார்.ஆருத்ரா நிதி நிறுவன மோசடி குறித்து புகார் எழுந்த நிலையில், திடீரென ஆர்கே சுரேஷ் காணாமல் போனார். அவர் துபாயில், பல மாதங்களாக தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆருத்ரா நிறுவனத்தில் நடந்த மோசடி புகாரில், அந்நிறுவனத்திடம் இருந்து 12 கோடி ரூபாய் வாங்கிய ஆர்.கே சுரேஷ் மீதும் போலீசார், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில், அவருக்கு போலீசார், பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு நேரில் வரவில்லை. அவரை காணவில்லை என்பதற்கான லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்தும் அவர் போலீசாரின் முன்னிலையில் ஆஜராகவில்லை, பல மாதங்களாக அவர், துபாயில் தலைமறைவாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஆர்கே சுரேஷின் சொத்துக்களை முடக்க, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.