ஓஹோ.. இது நடிப்பா, நாங்க கூட நெஜம்-னு நெனச்சோம்.. நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட வீடியோ இதோ…

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களை கவர்ந்து நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன்முதலாக ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அவ்வப்போது இணையத்தில் பகிர்வார் ரம்யா பாண்டியன். எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது நடிகர் சூரிய உடன் தான் படத்தில் சூரியனும் சிவகார்த்திகேயனும் பேசும் பேமஸ் டயலாக் ஒன்றை பேசி விளையாடும் வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் சூரிய உடன் சண்டை போடுவது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.விளையாட்டுக்காக எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.