உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்திய தேவனாக கார்த்தியும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். அதில் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது .இதனிடையே முதல் ஷோவில் இருந்து சிறந்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் சக்க போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ரஜினிக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள் நந்தினி மற்றும் வந்திய தேவன் என்று அவரே கூறி இருந்தார்.அதுமட்டுமல்லாமல் கதையைப் படித்து முடித்தவுடன் வந்திய தேவனாக நடிக்க வேண்டும் என்று தான் விரும்பியதாக ரஜினி கூறியுள்ளார்.

அதனைப் போலவே கமல்ஹாசன், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்தபோது ரஜினியை வந்திய தேவனாக போட சொல்லி கமல்ஹாசனிடம் சிவாஜியும் கூறியுள்ளார்.இந்நிலையில் வந்திய தேவனாக ரஜினி நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து ரசிகர்கள் அதனை கற்பனையாக புகைப்படம் ஒன்றை வடிவமைத்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
